Wednesday, 12 September 2018

Wednesday, 12 September 2018

ஒருகண்ணில் வெண்ணெய் மறுகண்ணில் சுண்ணாம்பு - அனுமதியோம் UNREASONABLE ATTITUDE OF BSNL:


 BSNL நிர்வாகம் மூன்றாவது சம்பள உயர்வு பிரச்சனையில் காட்டும் போக்கு இன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10-09-2018 ஊழியர் தரப்பு சம்பள பேச்சுவார்த்தைக்காக நிர்வாகத்தை சந்தித்தபோது அதிர்ச்சி அளிக்கும் செய்தி கிடைத்தது. ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதம் 0 சதவீதம்முதல் 5 சதவீதம் மட்டுமே தரமுடியும் என நிர்வாகம் கூறியது. அதே சமயத்தில் அதிகாரிகளுக்கு 15% ஊதிய உயர்வு தர சம்மதித்து DOTக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது மிகப்பெரிய துரோகம் ஆகும். நிர்வாகம் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவும் இப்போக்கினை கண்டிக்கிறோம். BSNL நிர்வாகம் DOTக்கு ஊதிய நிர்ணய விஷயத்தில் கடிதம் எழுதும் போது அதிகாரிகளுக்கு 15% உயர்விற்கு ஒத்துக்கொண்டுவிட்டு அதே சமயத்தில் நமக்கு 0-5 சதவீத உயர்வு என்று சொல்வதை ஊழியர் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. அதனை 10-09-18 நடந்த கூட்டத்தில் ஊழியர் தரப்பு ஆட்சேபித்து பேசியது. 

நமது தரப்பு 15% ஊதிய உயர்வு கேட்பதோடு மட்டுமல்லாமல் பிற அலவன்சுகளையும் உயர்த்தி தர கோரி பேச வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். நிர்வாகம் 2002-க்கு பிறகு மற்ற அலவன்சுகளை ஊழியருக்கு உயர்த்த ஊழியர் தரப்புடன் பேச தயாரில்லை. 2002-ல் தலைவர் குப்தா நமது பெற்று தந்ததே கடைசி சலுகைகளாகும். கடந்த 11 வருடங்களாக நிர்வாகம் இதனை எப்படியாவது தவிர்த்து வருவது அனைவரும் அறிவர். இரண்டாவது சம்பள கமிஷன் பேச்சு வார்த்தையில் பங்கு பெற NFTE சங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. BSNLEU தானே ஆகப்பெரும் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்ற இறுமாப்பில் பேச்சு வார்த்தையில் தனிஒரு சங்கமாக பங்கேற்றது. நிர்வாகம் லாபம் வந்த பிறகு மற்ற அலவன்சுகளை ஏற்றித்தருகிறேன் என்ற கூறிய பம்மாத்து பேச்சில் மயங்கி அதனை ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டது. ஆனால் நடந்தது என்ன?  நிர்வாகம் 2009 இல் இருந்து ”இல்லை” என்ற இதே பல்லவியை பாடிக் கொண்டு வருகிறது. 


மக்கள் உபயோகிக்கும் பல்வேறு பொருள்கள் விலை உயர்ந்தும் நமது அலவன்சுகள் உயரவில்லை என்பதுதான் வேதனை. ஆதலால் சம்பள உயர்வோடு நாம் மற்ற அலவன்சுகள் (perks and allowances) உயரவும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது அனைத்து ஊழியர்களின்  விருப்பம் ஆகும்.

வெளியீடு: சென்னை தொலைபேசி NFTE-BSNL

No comments: