Tuesday, 25 September 2018

பிஎஸ்என்எல் நிர்வாகம் தீடீரென்று ஊழியர்கள் சம்பள தேதியை மாற்றி உத்தரவு ஒன்றை பிறப்பித்ததை அனைவரும் அறிவோம். சாதாரணமாக அனைத்து வருடங்களிலும் கணக்குகள் முடியும் மாதம் அதாவது மார்ச் மாதம் மட்டும் நாம் முதல் தேதி  ஏப்ரல் பெற்று வந்தோம். ஆனால் முதல் தேதி ஊழியர்கள், ஐந்தாம் தேதி அதிகாரிகள், ஏழாம் தேதி பொது மேலாளர் போன்ற அதிகாரிகள் (தற்செயலாக ஒப்பந்த தோழர்கள் சம்பளமும் அன்றே வருகிறது) என்ற கால அட்டவணை வெளியிட்டு உள்ளது. இதில் ஏதாவது உள்குத்து உண்டா? என்று தொழிலாளிக்கு லேசாக சந்தேகம் வந்தது நியாயம் என்றே நினைக்கிறேன்.

 ஊதிய திருத்தம் பேச்சுவார்த்தைக் குழுவொன்றை உருவாக்கி, பிஎஸ்என்எல் நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கும் சங்கங்கள்,  ​​ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்து தரவேண்டும் என்று  போராடுகையில் இந்த  சமிக்கைச்சைகளை நிர்வாகம் தருவது  மூன்றாம் ஊதிய மறுபரிசீலனைக் குழுவிற்கு ”எந்தவொரு ஊதியத்தையும் நீங்கள் அதிகரித்து கேட்க கூடாது”  என்ற தெளிவான செய்தியை தருவது போல அமைந்துள்ளது..

கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் நீங்கள் சில செய்திகளை பார்த்திருக்கலாம்.” BSNL அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளது., பாருங்கள் தகவல்களை” என்றும், “ இந்த வருடம் நமக்கு லாபம் சுத்தமாக இல்லை.. நஷ்டம்...நஷ்டம்” என்ற புலம்பலோடு பல எக்ஸெல் ஷீட்களை போட்டு நம்மை பீதியை கிளப்பும் மற்றொரு வகை” செய்திகள்.

நமக்கு நன்றாகவே தெரியும் கடந்த சில வருடங்களாக நமது BSNL எந்த லாபத்தையும் ஈட்டவில்லை நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்ற தகவல். இது ஒன்றும் புதிய தகவல் அல்ல. இதற்கு பின்னால் உள்ள நோக்கம் என்ன என்றால் தொழிலாளியை என்ன கொடுத்தாலும் ஏற்று கொள்கின்ற மனோநிலைக்கு கொண்டு செல்லவே இது போன்ற தகவல்களை திட்டமிட்டு பரப்புவது. அதுவும் ஊதிய பேச்சு வார்த்தை சமயத்தில் இதனை கச்சிதமாக செய்தால் தொழிலாளி எந்த கேள்வியும் கேட்க மாட்டான் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

BSNL இன்றைய நிலைமைக்கு யார் காரணம்? அரசும் அதனுடைய தனியாருக்கு ஆதரவான நிலைபாடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைய செய்யும் முயற்சிகள் இவையே ஆகும். இதற்கு தொழிலாளி எப்படி பொறுப்பாவான். சிந்தியுங்கள் தோழர்களே!

நாம் அரசு நிறுவனமாக இருந்தபோது அப்போதய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் நம்மை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி சில உறுதிமொழிகளை அளித்தார்கள்.. அவை...
1. அரசு நிதியிலிருந்து அனைவருக்கும் ஓய்வு ஊதியம்.
2.BSNL நிறுவனத்திற்கு தேவையான நிதி உதவி தரப்பட்டு அது நலிவடையாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
3.அனைவருக்கும் வேலை பாதுகாப்பு

ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?

தொழிலாளர்களை அரசின் துரோகத்திற்கு எதிராக திரட்டுவதை விட்டுவிட்டு நிதி நிலைமையை சொல்லி பயமுறுத்துவது சரியா?

தொழிலாளர்களுக்கு நிலைமையை சொல்லி புரிய வைத்து அவர்களை திரட்டி நமது புதிய ஊதிய விகித்ததை பெற போராட தயார்படுத்துவதை தவிர்த்து சம்பள கணக்கு பார்..உனக்கு இவ்வளவு கிடைக்கும்... என்று எக்ஸெல் ஷீட் போட்டு அவர்களை திசை திருப்பினால் அது போராடும் நம் சங்களுக்கு எதிராக முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஊதியம் பெற போராடுவோம் தோழர்களை என்று அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
தோழமை வாழ்த்துக்களுடன்

சி.கே.மதிவாணன்
மாநிலச் செயலர்
சென்னை தொலைபேசி NFTE-BSNL
24-09-2018


No comments: