Thursday, 20 September 2018

தலையா கடல் அலையா  -  இது நாம் பலமுறை கேள்விப்பட்ட வார்த்தை...ஆனால் இதை இன்று நேரில் பார்த்தோம்...கடல் அலை போல் தோழர்கள் கூட்டம்.. கே.கே நகர். தொலைபேசி வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கம். NFTE-BSNL சங்கம் பொறுப்பேற்று இந்த கருத்தரங்கத்தை நடத்தியது. மூன்றாவது ஊதியவிகிதம் குறித்த கருத்தரங்கம் இது. உண்மை நிலையை படம் பிடித்தாற்போல் தலைவர்கள் பேச்சு அமைந்திருந்தது. BSNLEU சங்கம் கடந்தகாலங்களின் தானே ஒரே சங்கம் என்று இருந்தகாலத்தில் இழைத்த தவறுகள் குறித்து பேசப்பட்டது.
அனைத்திற்கும் மேலாக அருமையான ஆழமான மிக அவசியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


1. 15% ஊதிய உயர்வில் எந்த சமரசமும் கூடாது. 
அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சம்பள அமைப்பில் எந்த முரண்பாடோ பாகுபாடோ இருக்கக் கூடாது.


2. கடந்த முறை கோட்டை விட்டது போல இல்லாமல், இந்த முறை அலவன்ஸ்களை பெற்றே தீர வேண்டும்.அதுவும் 01-01-2017 முதல் தேதியிட்டு தரப்படவேண்டும்.


3. ஊதிய மாற்றத்திற்கான தேதி 01-01-2017 முதல் இருக்க வேண்டும்


இதனை துவக்கி வைத்து தோழர்.லிங்கமூர்த்தி  FNTO மாநிலச் செயலர் பேசினார். சகோதர சங்கங்கள் TEPU/ SEWA/ PEWA/ AIBSNLEA/ NFTCL தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
Image may contain: 7 people, outdoor and indoor Image may contain: 5 people, people sitting and shoesImage may contain: 6 peopleImage may contain: 3 people, people smiling, crowd and outdoor

No comments: