Thursday, 9 August 2018



09-08-2018 அன்று நிர்வாகத்துடன் நடைபெற்ற 

பயனுள்ள கூட்டம்


இன்று PGM (DEVELOPMENT) அறையில் நிர்வாகம் மற்றும் NFTE & BSNLEU தலைவர்களுடனான கூட்டம் பல்வேறு இடங்களில் உள்ள ஊழியர் பற்றாக்குறை பற்றி விவாதித்து தீர்வு காணும்பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. CGM, PGM(Hr), PGM (South) PGM (Central) GM (GSM) GM (TXM) GM (North) DGM (Hr) DGM(F&A) AGM(A) AGM (E) மற்றும்  பலர் நிர்வாகத்தின் சார்பாக கலந்துக் கொண்டனர். தோழர்கள். C.K. மதிவாணன், இளங்கோவன் மற்றும் இராஜேந்திரன்  NFTE சங்கம் சார்பாக கலந்துக் கொண்டனர். ஊழியர் பற்றாக்குறை அல்லது ஊழியர் உபரி போன்றவற்றை  அந்தந்த கோட்டம் அல்லது அருகில் உள்ள கோட்டத்திற்குள்ளாகவே சமன் செய்ய ஏகமனதான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இனிமேல் ஒரு கோட்டத்திற்கு ஒரு ஸ்டோர் மட்டும் இயங்கும்; அதை ஒரு டெலிகாம் டெக்னிசியன் மற்றும் ஒரு உதவி டெலிகாம் டெக்னிசியன் பராமரிப்பர். CSC மற்றும் CASH COUNTER களில் அனைத்து பில் வாங்குதல் மற்றும் / GSM & LANDLINE விற்பனை செய்தல் போன்றவை ஒரே இடத்தில் (SING WINDOW SYSTEM) நடைமுறைபடுத்தப்படும். 
24 மணி நேரமும் செயலாற்ற வேண்டிய பவர் ரூம் குறைந்தபட்சம் மூன்று டெலிகாம் டெக்னிஷியன்களால் செயலாற்றப்படும்.   
அனைத்து பொதுமேலாளர்கள் மூலமாக 30.09.2018 க்குள் ஊழியர்கள் சமன் செய்யும் பணி நிறைவேறும். மெட்ரோ பகுதிகளில் 900 இணைப்புகளுக்கு 2 டெலிகாம் டெக்னிஷியன்கள் போடப்படுவர். உற்கோட்டப்பகுதிகளில் 2500 இணைப்புகளுக்கு ஒரு டெலிகாம் டெக்னிஷியன் இருப்பார். 
புற பகுதிகளில் (CPT AREA) இது மாறுபடும். ஒவ்வொரு பிரிவிற்கும் புதிய ஊழியர் அளகீடு முறை நீண்ட விவாதத்திற்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டது. உண்மையான ஊழியர் எண்ணிக்கை மற்றும் ஊழியர் சமன்படுத்துதல் பற்றி முடிவெடுக்கும் முன் அந்தந்த பொது மேலாளர்கள் இரு சங்க மாவட்ட பிரதிநிதிகளுடன் விவாதித்து முடிவெடுப்பர்.  உபரி ஊழியர் சமன் செய்ய விருப்ப விண்ணப்பம் கேட்டு பெறப்படும். அதிக எண்ணிக்கையில் விருப்பம் பெறப்பட்டால் மூத்த ஊழியருக்கு அந்த இடம் ஒதுக்கப்படும். யாரும்  விண்ணப்பிக்காதபட்சத்தில் நீண்டகாலமாக அதே இடத்தில் இருக்கும் ஊழியர் மாற்றல் செய்யப்படுவார். 
பிற நிர்வாகப்பிரிவு பகுதிகளுக்கு விரைவில் புதிய வரைமுறை தீர்மானிக்கப்படும்.

நமது வேண்டுகோளின்படி அனைத்து பொதுமேலாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட இரு ஊழியர் சங்கத்திடம் ஊழியர் பிரச்சனைகளை தீர்க்கும்பொருட்டு மாதாந்திர கூட்டம் நடத்த அறிவுறத்தினார்கள்.


ஒட்டு மொத்தத்தில் இன்றைய கூட்டம் ஒரு பயனுள்ள அர்த்தமுள்ள கூட்டமாக இருந்தது. நமது தலைமை பொதுமேலாளரின் வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஓர் ஆண்டுக்கும் மேலாக வெறுப்பாகிப்போய் கிடப்பில் கிடந்த இந்த பிரச்சனை உண்மையிலேயே நமது தலைமை பொதுமேலாளரின் தலைமையால் ஒரு சுமூக தீர்வு பெற்றது.

( கூட்டம் முடிவுற்ற பின் தோழர். C.K. மதிவாணன் அவர்கள் அந்த கூட்டம் (REDEPLOYMENT MEETING) பற்றி சமர்ப்பித்த அறிக்கை )

No comments: