Sunday, 27 May 2018

 இருபெரும் மாணிக்கங்கள்

தென்சென்னை மாவட்டசங்கச்செயலர் தோழர். M. நாகராஜன், வடசென்னை மாவட்டச்செயலர். தோழர். R. ஆறுமுகம் இருவரும் இந்த மாதம் பணிநிறைவு செய்கிறார்கள். 

அவர்களுக்கு பணிநிறைவு மகிழ்ச்சிப்பெருவிழா சங்கத்தோழர்கள் நடத்துகிறார்கள். வாழ்வின் மறக்கமுடியாத நிகழ்வாக இவ்விருவரின் பணிநிறைவு விழா தோழர். C.K. மதிவாணனின் வாழ்த்துரையுடன் நடைபெறுகிறது என்பதை அவர்கள் ஒரு பாக்கியாமாகவே பார்ப்பதாக நான் நினைக்கிறேன். 

இன்று கொள்கை கோமான்களாக - மாணிக்கங்களாக - சிறப்பான சிற்பமாக - இவர்கள் இருவரும் பலராலும் பார்க்கப்படுகிறார்கள் என்று சொன்னால் அவர்களை செதுக்கிய சிற்பியாக நமது மாநிலச்செயலர்.தோழர்.C.K. மதிவாணன் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல. ஒரு படையை நடத்தும் மன்னனுக்கு வாள் ஏந்தி நிற்கும் வீரர்கள் எந்த அளவிற்கு தேவையோ அதேபோல் ஒரு தொழிற்சங்கத்தை திறம்பட நடத்த அதன் தலைவனுக்கு செயல்திறன் மிக்க கொள்கைபிடிப்புடைய அதேநேரத்தில் விசுவாசம் மிக்க தளபதிகள் அவசியம் தேவை. அந்த அடிப்படையில் தலைவர் மதிவாணனுக்கு தளபதியாக இவ்விருவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.


இவர்கள் இருவரும் சராசரி  தொழிற்சங்க ஊழியராக மட்டுமல்லாமல் இடதுசாரி சிந்தனையுடன் இச்சமூக நிகழ்வுகளை பார்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றால் அது நமது  NFTE  சங்கம் மற்றும் சங்கத்தின் மாநிலத்தலைமையினால் என்பதும் உண்மை. இந்த மாபெரும் சங்கமாம் NFTE சங்கத்தை இவர்கள் போன்ற ஆயிரம் விழுதுகள் காலங்காலமாக தாங்கி காத்து வருகிறார்கள். இவர்களின் பொதுவுடைமை பணி இனி முழுநேரப்பணியாக சமூகத்திற்கு தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

NFTE வடசென்னை மாவட்டம்.

No comments: