Saturday, 14 October 2017

விஜயவாடா மத்திய செயற்குழு கூட்டம்

தோழர்.மதியின் உரை வீச்சு
Image may contain: 1 person
நம்முன் இருக்கக்கூடிய தலையாய பிரச்சனைகளை நாம் வெற்றிகரமாக கையாள வேண்டும். குறிப்பாக போனஸ் ரூபாய் 7000/- குறைந்தபட்சம் பெற நாம் போராடுவது மட்டுமல்லாமல் அதற்கான ஃபார்முலாவை நாம் இறுதிசெய்யவேண்டும். 

இந்த செயற்குழு 3000 வாடிக்கையாளர் மையங்களை மூடும் நிர்வாகத்தின் முடிவினை கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டும்.இதனை படித்த தகுதிவாய்ந்த  இளைஞர்களை வேலைக்கு எடுப்பதன் மூலம் (நான்கு மற்றும் மூன்றாம்பிரிவு)  நிர்வகிக்க முடியும் என்பதனை நிர்வாகத்திற்கு புரிய வைக்க வேண்டும்.இது இதுவரை இருந்த ஆளெடுப்பு தடை சட்டத்தை உடைப்பதாகவும் இருக்கும்.

நாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற வேண்டும். நாம் பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் ஒரு தனித்தன்மை நிறைந்த பொதுத்துறை BSNL ஆகும். இதனை மற்ற பொதுத்துறை நிறுவனங்களோடு ஒத்திபார்ப்பதே தவறு என்பது என் கருத்து. 

BSNL இருக்கும் ஊழியர் அரசு தொகுப்பு நிதியிலிருந்து பென்ஷன்  பெறுகிறார்கள். மத்திய அரசு ஊழியரைப்போல GPF பெறுகிறார்கள். 

பல வருடங்களாக நஷ்ட்டத்தில் இயங்கிவரும் போஸ்டல் இலாகவில் போனஸ் ரூ.14,000/- பெற்று உள்ளார்கள். மத்திய அரசு சம்பளக் கமிஷன் பலன்களை 01-01-2016 முதல் பெற்று வருகிறார்கள். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இனி அனைத்து மட்ட கவுன்சில் கூட்டங்களுக்கான அஜண்டா ஊழியர் தரப்பு செயலர் மற்றும் தலைவர் இவர்கள் கையொப்பம் இடுவதுபோல உத்திரவு  மாற்றம் செய்யப்படவேண்டும்.

மத்திய அரசு BSNL பணத்திலே  Reliance Jio மற்றும் போஸ்டல்  இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டிக்ககூடிய ஒன்று.

இந்த செயற்குழு மோடி அரசின் திட்டமான தனி டவர் கம்பெனி அமைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும்.அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களை இணைத்துக் கொண்டு கடுமையாக போராட இந்த செயற்குழு முடிவு எடுக்கவேண்டும்.
Image may contain: 4 people, people smiling, people standing


No comments: