Saturday, 6 May 2017

மாலை நேர கல்லூரியானது 
மேதின விழா
ஆம் !  NFTE AND NFTCL இணைந்து நடத்திய மேதினம் மற்றும் காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழா அண்ணாசாலை தொலைபேசியகத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். குறிப்பாக SEWA சங்கத்தலைவர்.தோழர். P.N. பெருமாள் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்தால் போல் பேசியது சிறப்பாக அமைந்திருந்தது. மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களை இந்தியாவின் சட்டமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்களுடன் ஒப்பிட்டு பேசி அனைவரையும் சிந்திக்கவைத்த அவரின் பேச்சு அருமையாக இருந்தது. அவர்க்கு பின் பேசிய மாநிலசெயலர். தோழர்.C.K. மதிவாணன் அவர்களின் நீண்ட உரை இன்றைய நாளில் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு காரல்மார்க்ஸின் கொள்கை கோட்பாடு எந்த அளவற்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தது. அவரின் யதார்த்தமான ஆழமான சிந்தனை கொண்ட உரையால் ஒருமணி நேரம் அவையில் இருந்த அனைவரும் ஆடாமல் அசையாமல் கருத்தை உள் வாங்கிய விதம் ஏதோ மாலைநேர கல்லூரியின் மாணவர்களோ இவர்கள் எல்லாம் என்பதை போல் நினைக்கும் விதத்தில் இருந்தது.






Image may contain: one or more people, crowd, table and outdoorImage may contain: 4 people, people standingImage may contain: 4 people, people standingImage may contain: 8 people, people standing and outdoorImage may contain: 6 people, people smiling, people standingImage may contain: 12 people, crowd and outdoor

No comments: