Friday, 24 March 2017

மாநிலசெயலர் தோழர்.C.K.  மதிவாணன் அவர்களின் முகநூலிருந்து........(தமிழாக்கம்)
எதிரொலி ? (his master voice)


தன் வழக்கப்படி BSNLEU  மாநிலசெயலர் அவரது அறியாமையையும் அனுபவக்குறைவையும் தன் பதிலின் மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதில் அவரின் தயாரிப்பு அல்ல என்பதை உறுதியாக நம்புகிறோம். தமிழ் மாநில BSNLEU சங்கத்தில் உள்ள - அவர் சங்கத்தின் மிக உயர்ந்த நெடிய மனிதரை நாம் சமீபத்தில் வெளிப்படுத்திக் காட்டியதின் காரணத்தால்  காயமான, நம் மேல் கோபம் கொண்ட ஒருவரின் தயாரிப்பே இந்த பதில்... எப்படியோ ! அகில இந்திய தலைவர்கள் தொழிற்சங்க செலவில் மகிழுந்தில் (CAR) பயணிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார். அவரின் அனுமதிக்கு  நன்றி பாராட்டுவோம். ஆனால் மதிவாணன் அதையே பயன்படுத்தினால் அது மாபெரும் பாவச்செயல் ! தொழிற்சங்கப்பணத்தை வீணடிக்கும் காரியம் ! என்னேஅருமை !!

தொடர்ந்து பல காலமாக சென்னை மாநில NFTE சங்கத்தை காரியசித்தியுடன் மதிவாணன் செயல்படுத்திவருவதால் அவருக்கும் அவரின் தமிழ் மாநில சங்க எஜமானருக்கும் ஏற்பட்டுள்ள பயம், அச்சம் நமக்கு நன்றாகவே புரிகிறது.

என் பணிநிறைவுக்குப் பின் அகில இந்திய அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, நான் பின் நிற்பதைப்போல் அவர்களின் அகில இந்திய பொதுச்செயலர். தோழர். அபிமன்யூ இளைஞர் ஒருவருக்கு தன் பதவியை வகிக்க வழிகொடுப்பார் என்று சொன்னால் தோழர்.கன்னியப்பனின் ஆலோசனையை ஏற்று நான் மாநில செயலர் பதவியை இளைஞர் ஒருவருக்கு கொடுக்க பரிசீலிக்கலாம். முதலில் தோழர். அபிமன்யூவை  கன்னியப்பன் சமாதானப்படுத்தி புரியவைக்கட்டும் .

ஆரம்ப காலம் தொட்டு ( 1980ஆம்ஆண்டு முதல்) ஒரு பிரதிநிதியாக மாநில அளவிலோ அல்லது அகில இந்திய அளவிலோ அது NFTE யாக இருந்தாலும் சரி   NFPTE யாக இருந்தாலும் சரி, தொழிலாளர் நலப்பிரச்சனைகளில் அது எந்தத் தலைவராக இருந்தாலும் எதிர் கருத்துகள் வைக்க நான் எந்த நேரத்திலும் தயங்கியது இல்லை என்பதே உண்மை. (சொல்லப்போனால் அந்த காலத்தில் கன்னியப்பன் நிரந்தம் செய்யப்படாத ஊழியராக இருந்திருக்கலாம்). தொழிற்சங்க மேதை குப்தா கூட பல நேரத்தில் நான் வைக்கும் கூரிய எதிர் வாதத்தை உன்னிப்பாக கவனித்தார் என்பதற்கு ஏராளமான உதாரணங்களை அடுக்க முடியும்.

1)  வாரிசுக்கு வேலை திட்டம் : 

இந்த பிரச்சனை தேசிய செயற்குழுவில் 2003/2004 ஆண்டுகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தோழர். குப்தாவால் அதன் உயர்நிலைக்குழுவில் தோழர். மதிவாணன் இடம் கொடுக்கப்பட்டார் என்பது வரலாற்று உண்மை.

2) பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் போன் மெக்கானிக் பதவி உயர்வில் கல்வி தகுதி பிரச்சனையில் மெட்ரிகுலேசன் தேர்ச்சி என்பதுகூடாது என்று விவாதம் வைத்தோம். தோழர். குப்தா அவர்கள், ஒரு தேர்வு நடத்துவோம்;  அதில் தேர்ச்சி பெற்றோரை மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றதற்கு இணையாக கருதி பதவி உயர்வு கொடுக்கலாம் என்று இறுதி முடிவு செய்தார். நல்ல விவாதத்தின் காரணத்தால் இந்த முடிவு ஏற்கப்பட்டு குப்தா புதுடில்லி சென்றவுடன் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேசி ஆணை பெற்றார். அதுவே பின் லட்சத்திற்கும் மேலான  மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெறாத போன் மெக்கானிக் தோழர்கள் பதவி உயர்வு பெற வழிவகை செய்தது. 
 
விவாதம் செய்வதற்கு உரிய மரியாதை என்பது NFTE சங்கத்தில் இந்த அளவிற்கு உயர்வாக மதிக்கப்பட்டது. யார் ஒருவரும் தலைமையில் உள்ள எந்த ஒரு தலைவரையும்  விமர்சித்து விட்டு NFTE தோழனாக பத்திரமாக தொடர்ந்து இருக்கலாம். நான் சவால் விட்டுக்கேட்கிறேன். தோழர். கன்னியப்பன் அகில இந்திய தலைவர் அபிமன்யூவை ஒரு முறை விமர்சித்து விட்டு அந்த சங்கத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா ? பின் விளைவுகள் எப்படி இருக்கும் நினைத்துப்பாருங்கள்-- கணித்துப்பாருங்கள். அபிமன்யூ ஒரு  ஜனநாயகப்பண்பற்ற  சகிப்புத்தன்மையற்ற  தலைவர்.  தலைமையின் மீது விமர்சனம் என்பது அங்கே ஒரு சகிப்புத்தன்மையற்ற செயலாகக்கருதப்படுகிறது. யார் ஒருவர் விமர்சித்தாலும் அவர் தூக்கியெறியப்படுவார் என்பதே வரலாறு. பளிச்சென்று அதற்கு ஆயிரம் உதாரணங்கள் உண்டு. தோழர். P.S. இராமன் குட்டி, D. கோபாலகிருட்டிணன்,  J. ரங்கநாதன் G. ஆனந்தன்  R. குணசேகரன் என்று பட்டியல் நீள்வதை காணலாம். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

கன்னியப்பன் அவரின் எஜமானரின் குரலை பிரதிபலிக்கிறார். அவருடைய நிலைமை எங்களுக்கு புரிகிறது. இப்படி ஏதும் தரக்குறைவாக எழுதவில்லையென்றால்அவரின் எஜமானர்கள் அவர் அமைதியை கெடுப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே.

No comments: