Thursday, 16 March 2017

அபிமன்யுவிற்கு ஆயிரம் நன்றி ! -- தோழர் மாநில செயலர் சி.கே.மதிவாணன் கட்டுரை தமிழாக்கம்

11.03.2017 அன்று நடைபெற்ற BSNLEU சங்கத்தின் மாநாட்டிற்கு தோழர். கோவிந்தராசனின் அழைப்பை ஏற்று  நானும் கலந்துக்கொண்டேன். SNEA TEPU FNTO போன்ற சங்கங்களின் வரிசையில் NFTE  சார்பாக நானும் உரையாற்ற அனுமதிக்கப்பட்டேன்.

 என் உரையில் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுப்போராட்டத்தின் அவசியம் பற்றி விளக்கிப்பேசினேன். புதிய சம்பள ஊதிய மாற்றம்போனஸ், 78.2%இணைப்புஒப்பந்தத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை தொட்டதாக என் பேச்சு அமைந்திருந்தது. 

அவையில் கூடியிருந்த அனைத்து ஊழியர்களும் உரையின் கருத்தாழத்தில் இணைந்திருந்தது உணரப்பட்டதுபலர் வெளிப்படையாக பாராட்டினர். என்ன காரணமோ தெரியவில்லை தோழர். கோவிந்தராசனால் நான் அழைக்கப்பட்டு பேச அனுமதித்தது அபிமன்யூவால் பின்பு விமர்சிக்கப்பட்டுள்ளது. அதனை பின்னர் பல தோழர்கள் நம்மிடம் தெரிவித்தனர். நான் பேசும் போது அரங்கத்தில் இருந்தாலும் மேடைக்கு வராமல் பேச்சைமட்டும் கேட்டபடி இருந்தார் அபிமன்யூ என்பதும் தோழர்கள் மூலம் பின்பு அறியப்பட்டது.


12.03.2017 பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய அபிமன்யூ என்னையும் பொதுச்செயலர்.சிங் அவர்களையும் பொதுமேலாளர். திருமதி கலாவதி அவர்களையும் தன் தரத்திற்கு கீழே இறங்கி பேசியுள்ளார். நான் அழைக்கப்பட்டதையும் பெருந்தன்மைகுறைந்து விமர்சித்துள்ளார். நமது பொதுச்செயலர். தோழர். சிங் அவர்களை ஏளனமாகப்பேசியுள்ளார். அவர் தன் கையில் உள்ளதாகவும் தான் சொன்ன இடத்தில் கையெழுத்திடுவார் என்றும் தான் இப்படி அகில இந்திய அளவில் ஒருவரை வைத்திருக்கும்போது உங்களால் மாநில அளவில் அது ஏன் சாத்தியமில்லை என்றும் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் உச்சத்திற்கு சென்று கலாவதி என்ன ஜெயலலிதாவா?  நாம் கொண்டு செல்லும் கோரிக்கைகள் எதுவும் ஏன் சாதிக்கமுடியவில்லை என்றெல்லாம் பேசி இறுதியில்  பெருவாரியாக  BSNLEU தோழர்கள்  NFTE சங்கத்திற்கு திரும்பி செல்வதை வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்.


தோழர் அபிமன்யூவின் இந்த முகம்சுளிக்கும் பேச்சை சகிக்காமல் பலBSNLEU தோழர்கள் நம்மிடம் பேசினர். ஒரு தோழர் இவற்றை முகநூலில் பதிவு செய்துள்ளார்.  அபிமன்யூவுக்கு NFTE தலைவர்கள் மேல் இப்படி ஒரு கோபமான வெளிப்பாடு ஏன் என்பது புரியவில்லை.  ஆனால் அவர் தொழிலாளர்களுக்கு இழைத்த துரோகப்பட்டியலை அனைவரின் முன் படம் பிடித்துக்காட்டி வருவதை என்றைக்கும் நிறுத்த மாட்டேன். 


போனஸில் இழைத்த துரோகம், ஆண்டுகளில் பெற வேண்டிய ஊதியமாற்றம் 10 ஆண்டுகள் என்று ஆகியது, BSNLMRS திட்டத்தை பிசுபிசுக்கவைத்தது தோழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, 78.2% இணைப்பு,பென்சன் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, அதில் கலந்துக்கொள்ளாமல் இருந்த வரலாற்று துரோகம் போன்ற பட்டியல் தோழர்கள் முன் தொடர்ந்து வைக்கப்படும்.

13 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகாரத்தில் இருந்தும் கூட சாதிக்கமுடியாத - ஆனால் அள்ளிவீசிய வாக்குறுதிகள் பட்டியல் இதோ :
1) தேர்வின்றி பதவி உயர்வுஅதுவும் TMகளுக்கு TTA பதவி உயர்வு
2)நிர்வாகப்பிரிவு ஊழியர்களுக்கு நாட்கள் வேலை
3)ஊதிய முரண்பாடு களைதல்
4) அனைவருக்கும் 10,000/- போனஸ்
5) MTNL க்கு இணையான ஊதியம்.
ஆனால் ஒன்று புரிகிறது.  NFTE  மீதுஅவர் கோபம் இயற்கையானதே ! அதுவும் என்மீது கோபம் மிகவும் நியாயமே. எந்த முயற்சி எடுத்தும் சென்னையில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து நூற்றுக்கணக்கில் தோழர்கள் சங்கத்தில் இணைவதையும் தடுக்க இயலவில்லை. அவர் மனம் உடைந்து போவதும் புரிகிறது. 

ஆனால் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் இவர் அவர்களின் பிரதிநிதிகளே முகம்சுளிக்கும் வகையில் நிறுவனத்தின் பொதுமேலாளர் பற்றியும் சகோதர தொழிற்சங்கதலைவர்கள் பற்றியும் தரம் தாழ்த்திப்பேசுவது என்பது அவருக்கு  அழகல்ல. பொது அரங்கில் உரையாற்றும் போது உயரிய தலைவர்களுக்கு உயர்ந்த பெருந்தன்மை இருக்கவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. இருந்தாலும் தோழர் அபிமன்யூவிடம் இதனை நாம் எதிர்பார்ப்பது தவறுதான்.

நன்றி: மாநில சங்க வலைத்தளம்
 NFTE-BSNL CHENNAI TELEPHONES

No comments: