Wednesday, 8 March 2017

இந்நாள்
பெண் நாள்
பொன் நாள்

இல்லம்தோறும் இன்பமழை பொழிபவள்

அனைத்தையும் அடுத்தவர்க்காய் அர்ப்பணித்தவள்

தன்மானத்தின் தனி உருவம் அவள்

அன்பு என்ற வார்த்தையின் அகராதியும் அவளே

ஆண் துன்பப்படும் போது தலைசாய்க்க அவள் தோள்...
அவதிப்படும் அவன் இதயத்தின் காயம் ஆற்றும் அவள் அன்பு வார்த்தை

அன்னையும் அவளே
சகோதரியும் அவளே
தோழியும் அவளே
காதலியும் அவளே
மனைவியும் அவளே
மகளும் அவளே

 அனைத்து உறவும் அவள் கொடுத்த கொடையே...

மாதர்தமை இழிவுசெய்யும் மடமையை கொளுத்துவோம்...

அம்மையே !

நீயின்றி அமையாது இவ்வுலகு

NFTE வடசென்னை மாவட்டம்.

No comments: