Monday, 26 December 2016

என்றும் NFTE  எங்கள் நெஞ்சில்  NFTE

இது எதோ வார்த்தை ஜாலமல்ல ; உண்மையிலேயே பாதிப்புக்கு உள்ளாகிய இரு தோழர்களின் நெஞ்சார்ந்த வாக்குமூலம் என்றால் புதிர்போலத்தான் இருக்கும்.

மறைமலர் தொலைபேசி தோழர் அன்பு T.T.சில காரணங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அவர் மீது CBI தொடுத்த வழக்கு நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர் அந்த வழக்கிலிருந்து 2015 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவரை மீண்டும் பணியில் சேர்க்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நமது மாநில சங்கம் தலையிட்டு GM( HR) and DGM( HR) மற்றும் Corporate office and DOT அனைவரையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி இப்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.  அவரும் அவர் குடும்பத்தாரும் நமது மாநிலசெயலர் மற்றும் நமது சங்கத்தை பாராட்டுவது,  தமது கடமையை செய்து முடித்த மனநிறைவை தருகிறது. 


அதே போல் விருகம்பாக்கம் தொலைபேசி தோழர். பழனி T.T. மூன்று மாதங்களுக்கு முன்பு  விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்திருந்தார். பணி ஓய்வு பலன்கள் மற்றும் கிடைக்கும் பென்ஷன் போன்ற விவரங்களை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல் அவசரமாக தவறாக தான் விண்ணப்பித்திருந்ததை காலம்கடந்து உணர்ந்தார். எண்ணித்துணிக கருமம் என்பதை  எண்ணத்தவறிய காரணத்தால் பிரச்சனை உருவானது. நிர்வாகம் அவர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் சிக்கல் உண்டானது. இருந்தாலும் மாநிலச்சங்கம் சரியான நேரத்தில் தலையிட்ட காரணத்தால் நியாயத்தின் தன்மையை நிர்வாகத்திடம் மேல்மட்டத்தில் வலியுறுத்தி அந்த விண்ணப்பத்தை திரும்பப்பெற ஏற்பாடு செய்துள்ளது. நிர்வாகத்திற்கும் இந்த நேரத்தில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.  என்றாலும் தோழர்கள் நலன் காக்கும் விஷயத்தில் NFTE சங்கம் தொடர்ந்து முத்திரை பதித்து வருவதற்கு இவையெல்லாம் சிறந்த உதாரணங்கள். நான் ஒரு NFTE தோழன் என்ற அடிப்படையில் தலை நிமிர்ந்து நடந்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை.

NFTE வடசென்னை மாவட்டம்

No comments: