Tuesday, 27 December 2016

விசுவாசம் எங்களுக்கு NFTE சங்கத்தின் மேல் மட்டுமல்ல...   நம் வாழ்வின் ஆதாரமாம் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியின் மேலும் தான் என்பதை நிரூபித்துள்ளனர் நமது கல்மண்டபம் NFTE  தோழர்கள்..

சமீபத்தில் சென்னை மாநகரையே புரட்டிப்போட்ட வர்தா புயலின் போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர்கள். E.S. ஆனந்ததேவன் மற்றும் C.  சுப்பிரமணி இருவரும் இயற்கையின் சீற்றத்தை பொருட்படுத்தாமல் தொலைபேசியகம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து செயல்பட அத்தியாவசிய தேவையான டீசலை பெட்ரோல் நிலையத்திலிருந்து கொண்டுவந்து நிரப்பும் பணியில் முழுமையாக செயல்பட்டனர்.  

தான் பணியில் உள்ள கல்மண்டபம் தொலைபேசியகத்திற்கு மட்டும் என்று அல்லாமல் பூக்கடை தொலைபேசியகத்திற்கும் தேவையான டீசலை சப்ளை செய்துள்ளனர். அதுவும் இரவு 0900 மணி வரை இந்த பணியை செய்துள்ளனர். வடக்கு மாவட்ட பொதுமேலாளர் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டு துணை மேலாளர் (கல்மண்டபம்) மூலமாக இருவருக்கும் பாராட்டுக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.   முன் உதாரணமாக செயல்பட்ட அந்த இரு தோழர்களையும் NFTE சங்கம் பாராட்டி மகிழ்கிறது.

NFTE வட சென்னை மாவட்டம்.

No comments: