Wednesday, 9 November 2016

கண்ணீர் அஞ்சலி

நமது சங்கத்தின் மூத்த தோழர். M.இராமமூர்த்தி இன்று (09.11.2016) மாலை காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு வடசென்னை டோல்கேட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (10-11-2016) நடைபெறும். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

இன்றிருப்பார் நாளை இல்லை என்பது இவ்வுலகின் சிறப்பு என்று சொன்னாலும் Y.M.C.A. அரங்கில் அனைவரும் கூடி விழா எடுத்து பிரிவு உபசாரம் செய்த நிகழ்ச்சி நெஞ்சிலாட அவர் மறைந்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. 
இந்த சங்கத்திற்கும், தலைமைக்கும், நிறுவனத்திற்கும் அவர் ஆற்றிய பணியும் தோழர்களுடன் அவர் தோழமை உணர்வுடன் பழகியவை யாவும் ஒவ்வொரு தோழனின் நெஞ்சிலும் என்றும் நிலைத்திருக்கும். 

NFTE வடசென்னை மாவட்டம்.

No comments: