Tuesday, 17 December 2013

போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

16-12-2013-ல் CGM மட்டத்தில்நடைபெற்ற சுமார் 4 மணி நேர பேச்சு வார்த்தையின் விளைவாக நமது சங்கம் எழுப்பிய பெரும்பாலான கோரிக்கைகளை நிர்வாகம் தீர்த்திட முன் வந்ததால்-சில பிரச்சனைகள் மீது ஏற்கனெவே சாதகமான உத்தரவை பிறப்பித்திருப்பதால் மாலையில் நமது மாநிலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் நாளை மற்றும் டிசம்பர்-20 நடைபெற இருந்த போராட்டங்களை பிப்ரவரி முதல் வாரம் வரை ஒத்தி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

நிர்வாகம் சில பிரச்சனைகளை தீர்த்து வைக்க ஒப்புக்கொண்டாலும் அதை நிறைவேற்ற கால அவகாசம் தேவை என்று கூறுவதால் நமது சங்கம் இம்முடிவினை எடுத்துள்ளது.

இன்று நடந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தில் சார்பில் CGM, SR.GM (FINANCE), SR.GM.(HR & ADMN), ADDITIONALGM (HR & ADMN), AGM(E), AGM(BP), DE (LEGAL) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். நமது சங்கத்தின் சார்பில் தோழர்கள் ராமசாமி, சி.கே.எம்.,போஸ், ராஜசேகரன், இளங்கோவன், சி.ரவி, நாகராஜன், ஏகாம்பரம், ரகுநாதன், அன்பு உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.

நிர்வாகம் இந்த கால அவகாசத்தை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு எஞ்சியுள்ள ஒருசில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து முழுமையான நிறைவை நமக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

23 பிரச்சனைகளில் மூன்று பிரச்சனைகள் மட்டும் மாநில கவுன்சில் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. தரமான மருத்துவ மனைகளான பில்ராத், ராமசந்திரா, மியாட், லைஃப்லைன், மலர், எம்.வி.டயபடீஸ் உள்ளிட்டவை EMPANELLED LIST-ல் சேர்க்கப்படுமென நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

எனவே, 17-12-2013  நடைபெறுவதாக இருந்த தர்ணாவும், 20-12-2013 நடைபெறுவதாக இருந்த ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டமும் பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      NFTE வட சென்னை மாவட்டம்

No comments: