Monday, 18 November 2013



சதியை முறியடித்தோம்!   
   
 மதி இருந்த காரணத்தால் !!

மார்க்சியம் பேசுவோம்!   மேடையில்முழங்குவோம்!

ஆனால் ஊழியர்களை மட்டும் துண்டாடுவோம்!

 என்ற BSNLEUன் செயல்பாட்டில் மாற்றம் 
ஏதும் காணப்படவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக K.K. நகர் புறப்பகுதி (EXTERNAL – I)ல் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

சமீபத்தில் நமது சங்கத்தின் தொடர் 
முயற்சியால் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் R.M.லிருந்து TELECOM MECHANIC பதவி உயர்வு பெற்றது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

அதில் ஒருவராக தோழர். V. சண்முகம் K.K. NAGAR EXTN.I  பகுதியிலிருந்து EXTN II க்கு TELECOM MECHANIC  பதவி உயர்வு பெற்று மாற்றலில் சென்றார். தோழர். P. தனபால் T.M. உடன் மாற்றல் (mutual) கேட்டு EXTN. I பகுதிக்கு விண்ணப்பம் செய்தார். இதை தாங்க மனமில்லாத கோவிந்தாராசன் கூட்டம் இதை
தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்து படுதோல்வி அடைந்துள்ளனர். 

பொதுவாக இதைப்போல் பலமுறை mututal transfer நடைபெறும் போது NFTE சங்கத்தை பொருத்த வரையில் அது யார்? எந்த சங்கம்? என்று பார்க்காமல் நமது தோழர்கள் வசதிக்காக மாற்றலில் செல்கிறார்கள் என்ற மனப்பான்மையுடன் அணுகி வந்தோம்.  

(உதாரணமாக சமீபத்தில் தந்தி பகுதியில் நடைபெற்ற பெரிய அளவிலான மாற்றலில் கூடஒரு சில தனிநபர்களை காப்பாற்ற BSNLEU செய்த சதியால் ஏராளமான மூத்த தோழர்களுக்கு அநீதி ஏற்பட்டது. அந்த மூத்த தோழர்கள் நமது சங்க தலைமையை அணுகியதால் முறையான மாற்றலுக்கு வழிவகை செய்யப்பட்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மூத்த தோழர்களில் பலர் BSNLEU சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தான்!)

அவ்வளவு ஏன்? இதே K.K. நகர் பகுதியிலே கூட மாற்று சங்கத்தை சேர்ந்த பல தோழர்கள் இடமாற்றலில் சென்றதை அனைவரும் அறிவர். ஆனால் இதையெல்லாம் உணராத BSNLEU KK நகர் கிளை அன்பர்கள் எடுத்த முயற்சி தோல்வியில்
முடிந்துள்ளது. இந்த விஷயத்தில் TEPU  FNTO மற்றும் அண்ணா தொழிற்சங்க தோழர்கள் ஒத்துழைத்தது பாராட்ட்த்தக்கது.

இதிலிருந்து ஒன்று தெளிவாக தெரிகிறது.
இவர்களுக்கு (BSNLEU) போனஸ் பற்றி கவலை இல்லை

இவர்களுக்கு BSNL நிறுவனம் இலாபத்தில் இயங்க வேண்டும் என்பதில் கவலை இல்லை

இவர்களுக்கு இதே இடமாற்றல் பிரச்சனையில் அதிகாரவர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் மேல் கவலை இல்லை

ஒன்றின் மீது மட்டும் கவலையாம். 

 NFTE சங்கம் இதைப்போன்ற கிளை பிரச்சனைகளை வெகுவாக கையில் எடுத்து தீர்ப்பதால் எங்கே பெருவாரியாக NFTE க்கு போய்விடுவார்களோ என்பதில் மட்டும் கவலையாம்.

எங்களிடம் மதி இருக்க

உன்னிடம் கவலை மட்டுமே 

மிஞ்சும்! 


      B.வரதன்                      S.பிரபாகரன் 
      தலைவர்                      செயலாளர்

                                                                  V. பாபு
                                                         துணைத்தலைவர்




          N F T E   K K நகர் கோட்டம்.

TO PASTE IN THE NOTICE BOARD CLICK HERECLICK




No comments: