Wednesday, 27 November 2013

 

மிட்டு மிராசாக வாழ்ந்தால் மட்டுமே 
இந்த நாட்டில் நமக்கு மட்டு மரியாதை கிடைக்கும் என்று வாழும் இந்த காலத்தில், வயது முதிர்ந்த நிலையிலும் ஏழை பங்காளனாக வாழும் உத்தம தலைவர்.தோழர். நல்லகண்ணுவைப் பற்றிய செய்தியை நாளிதழ்களில் படித்திருப்பீர்கள். ஒரு சாராசரி இந்தியனுக்கு உடுத்த உடை இல்லை என்கிற போது எனக்கு கோட் சூட் எதற்கு என்று மதுரை மாநகர் வந்த மகாத்மா காந்தி மேலாடை உடுத்த தன் வாழ் நாள் முழுமைக்கும் மறுத்து நின்றார் என்பது நாமெல்லாம் படித்து அறிந்த செய்தி.

ஆனால் இன்று வாழும் மகாத்மாவாக தோழர் நல்லகண்ணு தன்
உடல் சுகவீனத்திற்கு ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சாதாரண பொதுமக்களில் ஒருவராக சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி கேட்டு  நெகிழ்ச்சி அடைகிறோம். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றால் அது கொண்ட கொள்கையின் வைராக்கியம் என்றே சொல்ல வேண்டும். 

ஆனால் இதில் வேடிக்கை பாரீர்! அழகிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை கிரீடம் அணிவித்து பிரம்மாண்டமாக செய்தியாக வெளியிடும் முதலாளித்துவ பத்திரிக்கைகள் இந்த மாபெரும் லட்சியவாதியை கொள்கைபற்றாளனின் செய்தியை பெட்டிசெய்தியாக வெளியிடுகிறார்களே ? இந்த சமூகம் என்று மாறுவது??,,,,,,,,,,,,,,,,,,,,,

 NFTE வடசென்னை மாவட்ட சங்கம்

No comments: