Monday, 25 November 2013

குற்றவாளிகூண்டில் B.S.N.L.E.U.

போனஸ் பற்றி முடிவெடுக்க நிர்வாகம் ஒரு கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது. அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் போனஸ் பார்முலாவை மாற்றியமைப்பது தான். அதாவது பல ஆண்டுகளாக போனஸ் என்பதையே இல்லாமலாக்கிய BSNLEU சங்கத்தின் திட்டத்திற்கு எதிரானது இது.

பல ஆண்டுகளாக போனஸ் பார்முலாவை மாற்றிமைக்க வலியுறுத்தி
NFTE சங்கம் நடத்திய பல போராட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
போனஸ் பெறுவதை நோக்கிய திசையில்  இது நமக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றி என்று இதை சொல்லலாம்; கொண்டாடலாம். 

ஆனால் வழக்கம் போல இதுவும் என் சாதனை தான் என்ற BSNlEU சங்கத்தை பார்த்து சாதாரண தோழன் கேட்கும் கேள்விக்கு அந்த சங்கத்திடம் நேரடி பதில் இல்லை.

1) இன்றைக்கு போனஸ் பார்முலாவை மாற்ற வேண்டிய அளவிற்கு ஒரு தவறான போனஸ் ஒப்பந்தத்தை போட்டது யார்?

2) போனஸ் நமக்கு கிடைக்காது என்பது தெரிந்த முதல் ஆண்டிலேயே லாபம் வந்தால் போனஸ் இல்லையென்றால் போன்ஸ் இல்லை என்ற தவறான போனஸ் பார்முலாவை மாற்றி அமைக்க முடியாமல் போனது ஏன்?
தான் மட்டுமே ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று இறுமார்ந்திருந்த சமயத்தில் போனஸ் பார்முலாவை மாற்ற முடியாமல் போனது ஏன்?

3) உங்களால் போனஸ் வாங்கிதர முடியாமல் போனாலும் குறைந்தபட்சம் இன்றைக்கு NFTE சங்கத்தால் போனஸ் பார்முலாவை மாற்றியமைக்க நிர்வாகத்துடன் போராடி அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சி கூட செய்யமுடியவில்லையே ஏன்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் குற்றவாளிகூண்டில் மெளனமாய் கைகட்டி நிற்கிறது BSNLEU.

இனி முழுமையான போனஸ் பெறும் திசை நோக்கி ஒருங்கிணைந்த போராட்டத்துடன் நடை போடுவோம் நாம்!!

NFTE வட சென்னை மாவட்டம்.








No comments: