Saturday, 7 July 2018

AUAB Demonstration on 11-07-2018 at CGM's office


இடம்: தலைமை பொது மேலாளர் அலுவலகம்.
நேரம்: மதியம் இடைவேளை

கோரிக்கைகள்

தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே…

ஊதிய உயர்வு…
ஓய்வூதிய உயர்வு…
ஓய்வூதியப்பங்களிப்பு..
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என
24/02/2018 அன்று அனைத்து சங்கங்களிடம்
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்…
.
BSNL அதிகாரிகளே….

தத்தளிக்குது…. BSNL…
தவிர்க்க வேண்டாமா? விரயச்செலவுகளை…

சிக்கலில் நிற்கிறது BSNL…
சிக்கனம் வேண்டாமா? இக்கணம்….
 ----------------------------------------------------------------------------------
தோழனே…
தொடர்ந்து செல்... துணிந்து நில்…
தோல்வியும் உன்னிடம் துவண்டு விடும்…

Sunday, 17 June 2018

பழைய குருடா ..... கதவை திறடா...

பழமொழி கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறதா ? ஆமாம் தோழனே.. உண்மை தான்... தேர்தலுக்கு தேர்தல் வரும் பூச்சாண்டி வழக்கப்படி தன் வேலையை ஆரம்பித்துவிட்டான்... உஷார்... உஷார்... 

தேர்தல் நெருங்கிவிட்டதாம்.. அபிமன்யூவிற்கு நான் தான் மிகவும் வேண்டியவன் என்று நிரூபிக்க வேண்டுமாம் !

தன்னிடம் சொந்தமாக சரக்கு ஏதும் இல்லை என்றும் புரிகிறதாம்.. என்ன செய்வது.. பழைய கதை தான். அன்றைக்கு O.P. குப்தா... இன்றைக்கு  C.K.M.

குப்தாவை குறை கூறியே பல ஆண்டுகள் ஓட்டி விட்டோம். நல்ல அனுபவம்.. அங்கீகாரம் கிடைக்க சுலபமான வழி... இன்றைக்கு மதிவாணனை வசை பாடுவோம் என்று ஆரம்பித்து விட்டார்கள்....
அது மட்டுமல்லை அவர்களின் BSNLEU சங்கத்திற்குள்ளேயே ஏகப்பட்ட கூச்சல்... 
இவனை பாராட்டினால் அவனுக்கு பிடிக்காது.. 
அவன் சொன்னால் இவன் செய்ய மாட்டான்... 
ஒர்ர்ர்ர்ரே வெட்ட்ட்டு குத்த்த்து... சமாளிக்க வேண்டாமா ??

எந்த கூட்டம் போட்டாலும் NFTE சங்கத்திற்கு சமீபகாலமாக முன்பைவிட கூட்டம் அதிகமாகக் கூடுகிறது.. உறுப்பினர்கள் பலர் NFTE சங்கத்தை நோக்கி படையெடுப்பதும் தெரிகிறது.. இருப்பதை தக்க வைக்க வேண்டாமா ?? 
ஆரம்பித்தார்கள் தனிப்பட்ட முறையில் வசைபாடும் பழைய பல்லவியை.. எடுபடவில்லை... சாத்தான் வேதம் ஓதலாமா என்ற போஸ்டர் இவர்கள் லட்சணத்தை கிழித்து தொங்க விடுகிறது. 
பாரீர்!!!   பாரீர்!!!.

FNTO சங்கத்திடமிருந்து  சின்னத்தை திருடினாய்

TEPU சங்கத்தின் மூலம் திமுக மத்திய அமைச்சர்களால் ஆதாயம் பெற்று பின் TEPU சங்கத்தை கழட்டி விட்டாய்

SC/ST ஊழியர்நலச்சங்கத்தை பிளவுபடுத்தி சீர்குலைத்தாய்

கருவறை முதல் கல்லறை வரை என்பதைப்போல ஓய்வூதியசங்கம் வரை அனைத்தையும் பிளவுபடுத்தி ஒற்றுமையை குலைத்தாய்....
இப்படி இவர்களின் தொழிலாளர் துரோக வரலாற்றை புரட்டிப்போடுகிறது இந்த போஸ்டர்...

மதிவாணன் போல் மதி  வேண்டுமாம்.. கிடந்து துடிக்கிறார்கள்... அவரைப்போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசவேண்டுமாம்.... 

CGM / GM  போன்ற அதிகாரிகள் அமர்ந்திருக்கும் மேடையில் ஆணித்தரமாய் அரங்கம் கரவொலி ஒலிக்க அவர் மாதிரி பேச வேண்டுமாம்... 
ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமையுடன் எழுத வேண்டுமாம்.. 

இன்றைய  அரசியல் நிலையின் அவலங்களை அவர் போல் ஆதாரத்துடன் பேச வேண்டுமாம்.. அரசின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத திட்டங்களை அம்பலப்படுத்தி தோழர்கள் முன்னிலையில் போராட்டம் நடத்த வேண்டுமாம்....
இவையெல்லாம் முடியாத காரணத்தால் மதிவாணின் மதிப்பை குறைப்பதாக நினைத்து இவர்கள் எழுதுவார்களாம்.. மூமூமூமூத்த தோழர்.. என்று இவர்கள் நையாண்டி செய்வார்களாம். அட சின்ன்ன புத்தி சிங்காரங்களே...அவரைப்போல் தகுதி தனக்கும் வேண்டுமென்றால் அது ஒரு இரவில் வரக்கூடியதா ?  உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி_________ஆகுமா ?
உன் முயற்சியை மெச்சுவோம்.. இனியாவது இதையெல்லாம் கைவிட்டு ஊழியர் நலனில் அக்கறை செலுத்த உன் சிந்தனை திரும்பட்டும் என எச்சரிக்கிறோம்..

NFTE வடசென்னை மாவட்டம்.

Thursday, 7 June 2018

தன்மானமே உன் விலை என்ன?

மனிதனின் அறவாழ்க்கைக்கு தன்மானம் மிகப் பெரிய அளவுகோல் !

தனக்கு சொந்தமானதையும் தன்னால் பிறப்பிக்கப்பட்ட படைப்புகளையும்  தனது என்று உரிமை கொண்டாடுவது எந்த அளவிற்கு தன்மானத்திற்கு அடையாளமோ அந்த அளவிற்கு தனது அல்லாததை இது எனது அல்ல என்று சொல்வதற்கும் ஒரு மன பலம் தேவை. 

தன்னால் எதிர்க்கப்பட்ட தனக்கு சம்பந்தமே இல்லாத பென்ஷன் போராட்டத்திலேயே பென்ஷன் நான் தான் பெற்றுக் கொடுத்தேன் என்று கூச்சமில்லாமல் கூறியது BSNLEU சங்கம். அன்றைக்கே நாம் சொன்னோம் “ஊரான் பிள்ளை என் பிள்ளை” என்று சொந்தம் கொண்டாடாதே என்று.

இன்றைக்கும் அவர்கள் மாறவில்லை.  அகில இந்திய கவுன்சில் சார்பாக ஊழியர்கள் அனைவருக்கும் 429 PALN  அடங்கிய சிம் கார்டு வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான உத்தரவு வந்தவுடன் சற்றும் தயங்காமல் அது தன்னால் பெறப்பட்டதாக நோட்டீசு அடிக்கும் அளவிற்கு சிந்தனையற்றுப்போய் இருக்கிறது BSNLEU சங்கம்.

கூரம்பாயினும் வீரியம் பேசேல்

நம் கையில் கூர்மையான அம்பே இருந்தாலும் கூட நீ வீரியம் பேசாதே - என்னால் முடியும் என்று கூவாதே - நான் தான் வீரன் என்று பிதற்றாதே என்று கூறுகிறது நமது நீதி நெறி நூல்.  ஆனால் கூர்மை மழுங்கிப் போய் நிற்கும் நீ, எந்த போராட்டம் செய்தாலும் NFTE துணை கிடைக்குமா? 
 நிர்வாகத்தை எதிர்த்துப்போராட  C.K. மதிவாணனும் அவர் தம் போர்ப்படையும் தமக்கு துணைவருமா?  என்று ஏங்கி நிற்பதை ஊர் அறியுமே !  
இந்த நேரத்தில் இப்படி ஒரு போஸ்டர் அடிக்கலாமா?

"இது குழந்தைத்தனமான செயல்" என்று கெளரவமாக வர்ணித்துள்ளார் என் தலைவர். ஆனால் உண்மையில் பார்த்தால் இது ஒரு மானமற்ற செயல்....  திருந்தட்டும்
இனியாவது..   
BSNLEU சங்கம் நாகரீக நகர்வு நோக்கி வரும் என்று எதிர்பார்ப்போம்.

NFTE வடசென்னை மாவட்டம்.
இன்று கல்மண்டபம் தொலைபேசி நிலைய வாயிலில் கோடைவெயிலை சமாளிக்கும் பொருட்டு மக்களுக்கு இளநீர் குளிர்பானங்களை வழங்கி மகிழ்ந்தினர். இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மாநிலச் செயலர் சி.கே.மதிவாணனின் 66 பிறந்த தின விழாவும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு NFTE-BSNL NFTCL மாவட்ட கோட்டச் சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன. Image may contain: 7 people, including Nftcl Ckm and Subbarayan Lakshman, drink and indoor

Tuesday, 5 June 2018

தோன்றின் புகழொடு தோன்றுக

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் அவ்வை மூதாட்டி. அந்த மானிடப் பிறப்பை பயன்படுத்தி வாழ்ந்து பயணப்படுவதில் எவ்வகைப்பயணம் 
போற்றுதலுக்குறியது ?

பெருவாரியான மக்களோடு  சாமான்யனாக இணைந்து வாழ்ந்து தன் உழைப்பு அறிவு தகுதி திறமை அனைத்தும் சாதாரண மக்களுக்கு பயன்பட வாழ்கிறானோ அவன் வாழ்வே சாலச்சிறந்தது என்பது சிந்தித்துப்பார்த்தால் புரியவரும்.

அவ்வகையில் நாம் வாழும் காலக்கட்டத்தில் நமக்கு தலைவனாக ஒரு தகுதியுடைய போர்க்குணம் மிக்க செயல்திறன் உடைய தன் மனம் நினைத்த உண்மையை நேர்மையுடன் வெளிப்படுத்தும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசா குணம் உடைய தோழர். மதிவாணன் கிடைக்கப் பெற்றார் என்பது நமக்கெல்லாம் பெருமையே. 

அவரது பிறந்த நாள் இன்று. நாட்காட்டியில் கிழிக்கப்படும் நாள் ஒவ்வொன்றும் தொழிலாளர் நலன் நோக்கியே என்ற அவரின் வாழ்க்கைப்பயணம் பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள். 


NFTE வடசென்னை மாவட்டம்